சின்னச் சின்ன ஆசை

மண்ணின் மடியில் 
தலைசாய்க்க ஆசை
மலருடன் மனம்விட்டு
கதைபேச ஆசை

நெஞ்சை நொருக்கும்
கொடிய இடியூடன்
கொஞ்சிக் குலாவி
கொலுபோக ஆசை

மின்னல் பிடித்து
வான் ஏற ஆசை
ஜன்னல் வழியே
மழைகாண ஆசை

குடையின்றி சாலையில்
நெடுநேரம் நனைந்து
நடைபோட எனக்கு
நெடுநாளாய் ஆசை

பௌர்ணமி நிலவில்
கடல் காண ஆசை
பகல்விரிக்கும் இரவின்
உடல் காண ஆசை

தலைகோதும் என்னவளின்
மடிசாய்ந்து நானும்
சிலையாகிப் போயிடவே
பிடிவாத ஆசை

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments