காதலாகிக் கசிந்து

பேய் பேல் அலைந்து
பின்முன் திரிந்து நான்
நாய் போ லாகிறேன் பெண்ணே!
உன்மேல் பித்தாகிப்போகிறேன் கண்ணே!

தாய்சொல் மறந்து  பின்
தரங்கெட்டுப் போகவே
காய்கிறேன் ஊண்கொண்டு வீணே
உறக்கமும் மதியும் கெட்டே!

கண்ணே! உன்னுடன்
காதல் கொண்டுநான்
மண்ணாய் ஆகிறேன் பெண்ணே!  நீ
இல்லை கூறிட
முன்னே சாதலால்
சேதம் ஆகுமென் நெங்சே!

உன்னுள் கலந்து  நான்
ஊனுள் உறைந்திட
என்னுள் காய்கிறேன் வெந்து
நானும்….
மண்ணுள் பொகுமுன்
தன் உள் காதலை
சொல்லிப் போவடி பெண்ணே!

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments