பௌர்ணமியில் ஓர்நாள்

பௌர்ணமி நிலவு
பழபழக்கும் இரவு
மெல்லும் உன் மௌனம்
கொல்லும் எனட யௌவனம்
இவை நடுவே…
நிலவில் கரந்தொழுகும்
இரவை நுகர்ந்தபடி
நட்சத்திரமெண்ணும் நான்…


சிறுவண்டின் சிறகோசை கேட்கும்
நிசப்பத்தில் நள்ளிரவு…
நகர்ந்தும் நகராமல் தோன்றும்
கடிவாளம் கட்டிய கடிகாரம்
நடுநிசியினில்
நாமிருவரும் நயப்பதுகண்டு
மூர்ச்சையாகிப் போகிறது
நகரும் முழுநிலவு
.

நடக்கும் நிலவொன்றை
பார்த்த ஒருவனாய்
நான் மாண்டு போனாலும்
குவளை மலர் தலைகுனியூம்
மென்மையினை நான்நுகர்ந்து
உயிர்மை நான் துறந்தாலும்
வண்புகழோங்கும்  தமிழ்
இனிமை நான் கேட்டு
இக்கணமே இறந்தாலும்
இச்சைகொள்வேன்
அன்பே உந்தன்
உறவினாலே உறைந்து போனேன்.

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments