என்னென்று பொங்குவேன்.

 (இக்கவிதை மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தால் 2011 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கவியரங்கில் என்னால் வாசிக்கப்பட்டது.)


பொங்குதம்மா இங்கு வெள்ளமெல்லாம் - துயர்
தங்குதம்மா மக்கள் உள்ளமெல்லாம்
மங்குதம்மா மனம் வேகுதம்மா - பலர்
ஏங்கையிலே தினம் நோகுதம்மா

தாங்க வழியில்லையம்மா - உயிர்
வாங்குமந்த அடைமழையில்
தூங்க முடியல்லையம்மா பாவம்
நாங்களென்ன செய்திடுவோம்!

வங்கமணைய வோர்
கங்கை பெருக் கெடுத்தோடிடவே- மக்கள்
தங்களிருக்கையில் தங்கவழியின்றி
எங்கு செல்லவென வாடிடவே
சங்கு முளங்கிட சாமரை வீசியே
பஞ்சஞ் தலைவிரித் தாடிடவே - நானும்
நெஞ்சு நிமிர்த்தியே வாஞ்சையோடிங்கு
என்னென்று முன்நின்று பொங்கிடுவேன்

பள்ளிகளெல்லாம் தயாராகின
வெள்ளமுகாமாகிடவே - பஞ்சம்
எள்ளிநகை யாடுதிங்கே -தினம்
துள்ளி விளையாடு தங்கே! -சாதி
மெல்லப்பாடை ஏறுதிங்கே!

மெல்ல மெல்ல வந்து வெள்ளம்
துல்லியமாய் சொல்கிறது
இல்லை பொங்கல் இல்லையென்றே - அது
வல்லினமாய் சொல்கிறது - மீறி
என்னவென்று பொங்கிடுவேன் - நானும்
என்னவென்று பொங்கிடுவேன்.

அஞ்சுகின்ற பிஞ்சு மனம்
கெஞ்சுகின்ற தின்று நிதம்
முஞ்சுதலை விஞ்சி யொரு
தஞ்சமில்லை என்று எண்ணி

எஞ்சியவை என்று சொல்ல
கொஞ்சமுமே மிஞ்சவில்லை
இந்த நிலை மாறுமுன்னே!
என்னென்று பொங்கிடுவேன் - நான்
என்னென்று பொங்கிடுவேன்.

வெள்ளமிங்கு பொங்கி வர
வள்ளமெல்லாம் வீதி வர
கள்ளரெல்லாம் ஒன்றுபட
வள்ளரெல்லாம் தள்ளி நின்றால்
என்னவென்று பொங்கிடுவேன் - நான்
என்னவென்று பொங்கிடுவேன்.


அலையலையாய் வெள்ளம் வந்து
தலைதலையாய் கொண்டு செல்ல
நிலைகுலைAம் நம்மவரை
நிற்கதியாய் விட்டுவிட்டு
என்னவென்று பொங்கிடுவேன் - இங்கு
தன்னந்தனி நின்று கொண்டு - நான்
என்வென்று பொங்கிடுவேன்.


வயல் நிலம் கலைAதே!
வளம் பலம் குலைAதே
நிலம் ஜலம் ஆகுதிங்கே!- மக்கள்
நலம் சிலை யாகுதே
தனம் குலைந் தோடுதே!
இனம் தலை மூழ்குதிங்கே! - நானும்
என்னென்று பொங்கிடுவேன் - இங்கே
என்னென்று பொங்கிடுவேன்


கூரைகள் ஏறி
கதறல் விண்ணேக
வெள்ள
நீரையே மீறியொரு
போர் தொடுப்போம் - பாரை
ஓரணியாய் நின்று நாமும் நேர்த்தி செய்வோம்
அதற்காய்
பேரணியாய் பொங்கி எழுந்திடுவோம்.- நாம்
பேரலையை விஞ்சி எழுந்திடுவோம்

பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிட
பார்க்கடலீர்ந்த பிரான் - எம்
மாக்களும் நோக்களால்
வெந்து அழுந்திடல்
நோக்கிடல் வேண்டுமென -
நான்
சினங்கொண்டு சிவனுன்மேல்
பாப்புயல் வீசியே பொங்கியெழுந்திடுவேன்.

முக்கண்ணனே நீAம் இக்கணமே வந்து
மக்களைக் காக்கவேணும்- இல்லை
செக்கணும் போகுமுன் சினங்கொண்டு நானும்
பொங்கி யெழுந்திடுவேன் - உன்மேல்
பொங்கியெழுந்திடுவேன்.

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments