அன்னையே உனை ஆராதிக்கின்றேன்

ஏட்டிலே கவி காட்டியே - எனை
பாட்டிலே ஊறிட வைத்தவள்
ஊட்டியே தமிழ் நாட்டியே எனை
மரபாக்கியே மகிழ் வித்தவள்

சூட்டுவேன் மலர் ஏற்றுவேன் - உனை
பாட்டிலே பறை சாற்றுவேன்
காட்டிலே கன்று மாட்டியதை - புகழ்
நீட்டிட நேர்த்தியாய் வைத்தவுனை

நாவிலே கலை தூவியே -என்
பேதமை போயிட வைத்திடுவாள்
பாவிலே தமிழ் கூவிட - வெண்
தாமரை நாயகி ஏவிடுவாள்

மலர்வடிவம் அவள் திருவதனம்-பலர்
நிலை குலையும் தளிர் மறுவுருவம்
பல மலையுயரம் அவள் அருள் நிறையும்
கலைக் காதலியே உனைப் போற்றுகிறேன்

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments