கவிஞர் நீலாபாலன் அவர்களின் “கடலோரத் தென்னை மரம்” என்ற கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் என்னால் பாடப்பட்ட கவிவாழ்த்து.












கல்முனை தந்த முத்து நீ – இந்த
ஹத்தாவுள’ வந்த சொத்து நீ – இந்த
‘ஹத்தாவுள’ வந்த எங்கள் சொத்து நீ
பூரணிப்பிள்ளை எனும் பத்தினி
எமக்கீர்ந்த கவி வித்து நீ
நல்லதம்பியின் ஏக புத்ரன் நீ
எமக்கெல்லாம் கவி அப்பன் நீ
செவி ஏறலிலே கவி படித்தாய்
கவி பாடலிலே புகழ் படைத்தாய்
மரபுடைத்தாய் புதுவுருவெடுத்தாய்
நவ சரித்திரம் வடித்தாய்
அன்று…
நீலாவணனால் பண்பட்டாய்
துணையின் பெயரை முன்னிட்டாய்
இன்று …நீலாபாலனாய் விண்தொட்டாய்
எழுபத்தாறில் அரசை விட்டாய்
விலகிப் பெருந்தோட்டம் தொட்டாய் – இப்போ
மலையகவாசியாகி விட்டாய் – உன்னால்
கவிதையும் சேர்ந்து தழைக்குதே மொட்டாய்
இங்கு உன்னால்
கவிதையும் சேர்ந்து தழைக்குதே மொட்டாய்
கல்முனைப் பூபால் கல்முனைக் கவிராயர்
கவிஞானசேகரி கவிபாலன் எரியீட்டி
இவை
கவிதைக்காய் நீ இட்டவை
கவிதை வித்தகன் கவிமணி கவிமாமணி
பாவரசு தமிழ்மணி சாமசிறி கலைத்திலகம்
இவை
கவிதையால் உனைத் தொட்டவை
உன்புகழ் நட்டவை
வீறுகொண்டின்னமும் அடி எட்டிவை – விண்ணை முட்டவை
இறுதியாய் ஒரு சிறிய வேண்டுகோள்
நாமும் கவிபுனைய
தலைப்புகள் கொஞ்சம் விட்டுவை.
இது ஒரு புது விதி என ஒரு தனி விதி எழுதி நீ பாவிசைத்தாய்
உனைவிட எவன் இனி அவனியில் ஒரு கவி என தினம் நானுரைப்பேன்

1 comments:

ரதி சொன்னது…

கவிதைகள் மிகவும் அருமையாக உள்ளன

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments