?

கறுப்பாயிருப்பானோ? - இல்லை
கற்கண்டுக் கலர்போல
எடுப்பபரிருப்பானோ?
வேட்டி அ ணிந்தவனோ - விரல்
நீட்டிக் கதைப்பானோ?
பாட்டி அருகிருந்து  - கதை
கேட்டு வளர்ந்தவனோ

என்ன மொழியில்
எப்படி அவன் கதைப்பான்
தின்ன வழிக்காக
என்ன தொழில் அவன் செச்வான்?

ஆறடி இருப்பானோ?
நூறடி இருப்பானோ?- இல்லை
ஆண்டாரையும் தாண்டி
ஆகாயம் தொடுவானோ?

மச்சம் உண்பவனோ? - அவனுக்கு
இச்சை மரக்கறியோ?
எச்சியிலை நான் உண்ண
மிச்சம் வைப்பானோ?

தொப்பை வளர்த்தவனோ?
குப்பை எடுப்பவனே?- இல்லை
மப்புப் போட்டுவிட்டு  - ரோட்டில்
மல்லாந்து படுப்பவனோ?

கல்வி கற்றவனோ? - அது
இல்லை என்பானோ
தொல்லை தருபவனோ - இல்லை
தொடர்ந்து வருபவனோ?

எனக்காக அப்பன்
பார்த்த மாப்பிள்ளை
எப்படியிருப்பானோ?

posted under |

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments