புரிந்துணர்வு
அவன்மேலோ அல்லது
அவள்மேலோ உனக்கு
புரிந்துணர்வு வந்தால்
பிரிவுகள் பாடையேறும்.
“ம்” கூட இதிகாசம் எழுதும்
“உம்” சொன்னாலும்
சொல்லா விட்டாலும்
உண்மை விளங்கும்
மௌனம் கூட உனக்கு
பதில் சொல்லும்
இடைவெளிகள்
இடைநிறுத்தம் செய்யூம்
மாற்றுக் கருத்துக்கள்
மன்னிப்பு மனுக்கோரும்
புரிதலால் அல்லவா
கோடையெனும் கொடிய
ஊடலின் பின்னரும்
பூமியும் வானும்
மழைக் கரத்தால்
கைகோர்த்துக் கொள்கின்றன.
புரிதலில் அல்லவா
பூக்களும் வண்டும்
பூமிக்கு வெளியே
புன்னகைத்துக் கொள்கின்றன.
அலையும் கரையும்
அடிக்கடி வந்து
அமைதிப் பேச்சு நடத்துவதும்
கல்லும் உளியும்
கதைக்காமலேயே
சிலைதந்து எம்மை
சிலாகிக்க வைப்பதும்
இலையை உதிர்த்தி
ஓராண்டு சென்றாலும்
காலத்திற்கு மரங்கள்
இளவேணில் கொடுப்பதும்
பூவை வீழ்த்தும்
தண்டுக்கு மரங்கள்
மீண்டும் மீண்டும்
மொட்டை முகிழ்ப்பதும்
முட்டியும் மோதியும்
யாத்திரையில் எறும்புகள்
முறைப்பாடு செய்யாமலே
முடிவுக்கு வருவதும் - இந்த
புரிதலால் அல்லவா!
காதலனாய் இருந்தாலும்
கணவனாய் இருந்தாலும்
காதலி மனைவி இரண்டுமே என்றாலும்
பெற்றௌராய் பிள்ளைகளாய்
மற்றௌராயிருந்தாலும்
புரிந்து கொள்ளுங்கள்
ன்னகை பூச்சொரியும்
சந்தோசம் சடங்கெடுக்கும்
புரிந்து கொள்ளுங்கள்
0 comments:
கருத்துரையிடுக