கிள்ளை விடு தூது

நெஞ்சு கிளந்தௌ
வஞ்சி அழுந்திட
செஞ்சிறை போவென
சொல் கிளியே - தமிழ்
வஞ்சமுண்டென்றுநீ
சொல் கிளியே!


பஞ்சமெமக்கிலை
கெஞ்சலழகிலை
எஞ்சியவன் செவி
சொல்கிளியே - தமிழ்
தஞ்சமிலை என
சொல்கிளியே!

மாண்டவர் பூமியை
ஆண்டவர் நீயென
மீண்டெழுந்து நீ
சொல்கிளியே - தமிழ்
தாண்டுபோகாதென
சொல் கிளியே!

வெந்து சிறை படும்
எந்தனினத்தவர்
சொந்தமுண்டென்றுபோய்
சொல்கிளியே - தமிழ்
பந்தமுண்டென்று நீ
சொல் கிளியே!

ஊரையழித்திடும்
போரைப் படைத்தவர்
நாரையுரித்திட
செல்கிளியே- தமிழ்
பேரை உரத்து நீ
சொல் கிளியே!

கந்தகமாயொரு
முந்திய சந்ததி
தந்தது நாமென
சொல்கிளியே - தமிழ்
வெந்து தணிந்திட
நில் கிளியே!

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments