இன்னமும் உன்னையே நேசிக்கிறேன்

என் தனிமையை எப்போதும்
உன்னுடனேயே
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

யாருமில்லா தனியறையில்.....
நதியோர மர நிழலில்....
ஊர் உறங்கும் பேரிருளில்
ஓற்றை மெழுகுவர்த்தியில்
நீயும் நானும் மட்டுமே
வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

பிரியும் நேரம் விரையும் போது
எத்தனை துன்பமோ
உன்னை எனதாக்கிக் கொண்டபோது
நான் அடைந்ததும் அத்தனை இன்பம்

எத்தனை இரவுகள்
ஒரே தலையணையில்
நீயும் நானும்.....
உன் பரிசத்தோடு
உறங்கிய இரவுகள்தான்
எத்தனை எத்தனை?

அறிவுடன் அடக்கமாயிருக்க
எங்கு கற்றுக்கொண்டாய்?
அதனாலோ என்னவோ
என்னை நீ ஈர்த்துக் கொண்டாய்

ஒவ்வொருநாளும்
உனக்கு நான்
பார்த்த முகம்
ஆனால்...
உன்னைப் புரட்டுகையில்
உன் ஒவ்வொரு பக்கமும்
எனக்கு நீ
காதலியின் காலை வணக்கம்

எமது உறவின் பிரிவை
கட்டியம் கூறியது நாள்காட்டி
கார்த்திகை எட்டாய்

நூலகருக்கெங்கே தெரியப்போகிறது
மீண்டும் அந்த
இறாக்கையிலிருந்து
நீயும் நானும்
ஒரே தலையணையில்
ஒன்றாயிருப்போம் என்பது.

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments