மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் நடத்திய அன்புமணி நினைவு தினம் - 22.03.2014
அன்புமணி ஐயா!
நீங்கள் மரித்தது மெய்யா?
சீச்சீ பொய் பொய் பொய்
உங்கள் அன்பு கண்டு
அவன் அழைத்திருப்பான்
இடம் மாறியது உன் சேவை - இங்கே
தடம் கோணியது தமிழ் (சங்கம்)
தமிழுக்குச் சற்றுத் தலைக்கணம்தான்
நீ இருந்தவைரை
தமிழ்ச் சங்கத்துக்கும் விலை கனந்தான்
நீ இறக்கும் வரை
ஆரையூர் தந்த முத்து நீ
அனைவருக்கும் வந்த சொத்து நீ –எங்கள்
அனைவருக்கும் வந்த சொத்து நீ
தங்கப் பிள்ளை எனும் பத்தினி
எமக்கீர்ந்த தமிழ் வித்து நீ
இதழ்களில் உனக்கொரு பித்து - அதனால்
எமக்காய் தந்தாய் 'மலர்' எனும் கொத்து
இது நீ இல்லாத ஒரு நிகழ்வு – அதுவும்
நீ இல்லாததால் வந்த விளைவும்
நீ; இல்லாத அரங்கு....
சூரியன் இல்லாத பூமி.....
நட்சத்திரமில்லாத வானம்...
நிலவில்லாத இரவு...
பாசமில்லாத உறவு...
ஆனாலும் நிகழ்வு ஜொலிக்கிறது.... – காரணம்
உன் அன்பால் நீ இருக்கிறாய் எம் மனதிலெல்லாம்.
அதையும் மீறி எம்முள் ஏதோ குறைகிறது
அன்புமணி இல்லாத அரங்கு போல....
ஓ.... எனக்குத் தெரியும்
இதொல்லாம் உனக்குப் பிடிக்காதென்று.
அன்பில்லாத மனிதம்.... – வர்ண
அட்டையில்லாத சஞ்சிகை
அதனுடன் சந்த மில்லாத கவிதையும் தான்
இது போன்ற சந்தமில்லாத கவிதையும் தான்
ஏனக்குத் தெரியும் உனக்குப் பிடிக்காதென்று
சரி மாற்றுகிறேன்...
அன்புமணி என்றாலே அன்பு துள்ளும் - அவர்
பண்புதனைச் சொன்னாலோ பழுத்த வெல்லம்
என்புடைத்து உயிர் எடுத்தான் கறுத்த வில்லன் - எல்லோர்க்கும்
நண்பரென வாழ்ந்திருந்தார் நாக லிங்கம் இரா நாகலிங்கம்
மட்டககளப்புக்கு மாபெரும் இழப்பு – உன்னால்
எட்டுத் திக்கிலும் ஏதோ ஓர் தவிப்பு
தட்டத் தனியே நாமிங்கு பதைப்பு – ஐயா
விட்டுக் கொடுப்பதே உங்களின் சிறப்பு
ஏர் எடுத்து காடுழவும் உழவன் போல – நீர்
ஏடெடுத்து நாடுழுதீர் அருள் மணியே
பார் முழுக்க உன் நாமம் ஓங்குதையா –ஆரை
ஊர் முழுக்க கண்ணீரால் மூழ்குதையா...
பார்முழுக்க உன் நாமம் ஒலிக்குதையா – ஆரை
ஊர் முழுக்க கண்ணீரால் கலிக்குதையா.
எல்லா நிகழ்விலும் நீயே முதல் வரி
இலக்கியம் என்றால் உனக்குத் தனி வெறி
அன்பும் அமைதியும் உந்தன் இரு விழி
பண்பும் பணிவும் அறிவோம் உன் வழி – நாம்
பண்பும் பணிவும் அறிவோம் உன் வழி
ஓரிறைக் கொள்கையை நெறியாய் கண்டாய்
ஈரடிக் குறள் தன்பால் ஈர்ப்புக் கொண்டாய்
முத்தமிழ் நீயும் முழுதாய் உண்டாய்
நாற்றிசை போற்றிட வாழ்வும் கண்டாய்
ஐபுலன் தமிழுக்காய் எழுதி வைத்தாய் - இப்போ
ஆறடி மண்ணிலே அமைதி கொண்டாய்..
ஏழேழு ஜென்மமும் உனை மறவோம் - இனி
எட்டுத் திக்கிலும் உனைப் பறைவோம்
ஒன்பது வாயில்கள் மூடினாலும்
உன்புகழ் வானையும் மேவுதையா
நீங்கள் மரித்தது மெய்யா?
சீச்சீ பொய் பொய் பொய்
உங்கள் அன்பு கண்டு
அவன் அழைத்திருப்பான்
இடம் மாறியது உன் சேவை - இங்கே
தடம் கோணியது தமிழ் (சங்கம்)
தமிழுக்குச் சற்றுத் தலைக்கணம்தான்
நீ இருந்தவைரை
தமிழ்ச் சங்கத்துக்கும் விலை கனந்தான்
நீ இறக்கும் வரை
ஆரையூர் தந்த முத்து நீ
அனைவருக்கும் வந்த சொத்து நீ –எங்கள்
அனைவருக்கும் வந்த சொத்து நீ
தங்கப் பிள்ளை எனும் பத்தினி
எமக்கீர்ந்த தமிழ் வித்து நீ
இதழ்களில் உனக்கொரு பித்து - அதனால்
எமக்காய் தந்தாய் 'மலர்' எனும் கொத்து
இது நீ இல்லாத ஒரு நிகழ்வு – அதுவும்
நீ இல்லாததால் வந்த விளைவும்
நீ; இல்லாத அரங்கு....
சூரியன் இல்லாத பூமி.....
நட்சத்திரமில்லாத வானம்...
நிலவில்லாத இரவு...
பாசமில்லாத உறவு...
ஆனாலும் நிகழ்வு ஜொலிக்கிறது.... – காரணம்
உன் அன்பால் நீ இருக்கிறாய் எம் மனதிலெல்லாம்.
அதையும் மீறி எம்முள் ஏதோ குறைகிறது
அன்புமணி இல்லாத அரங்கு போல....
ஓ.... எனக்குத் தெரியும்
இதொல்லாம் உனக்குப் பிடிக்காதென்று.
அன்பில்லாத மனிதம்.... – வர்ண
அட்டையில்லாத சஞ்சிகை
அதனுடன் சந்த மில்லாத கவிதையும் தான்
இது போன்ற சந்தமில்லாத கவிதையும் தான்
ஏனக்குத் தெரியும் உனக்குப் பிடிக்காதென்று
சரி மாற்றுகிறேன்...
அன்புமணி என்றாலே அன்பு துள்ளும் - அவர்
பண்புதனைச் சொன்னாலோ பழுத்த வெல்லம்
என்புடைத்து உயிர் எடுத்தான் கறுத்த வில்லன் - எல்லோர்க்கும்
நண்பரென வாழ்ந்திருந்தார் நாக லிங்கம் இரா நாகலிங்கம்
மட்டககளப்புக்கு மாபெரும் இழப்பு – உன்னால்
எட்டுத் திக்கிலும் ஏதோ ஓர் தவிப்பு
தட்டத் தனியே நாமிங்கு பதைப்பு – ஐயா
விட்டுக் கொடுப்பதே உங்களின் சிறப்பு
ஏர் எடுத்து காடுழவும் உழவன் போல – நீர்
ஏடெடுத்து நாடுழுதீர் அருள் மணியே
பார் முழுக்க உன் நாமம் ஓங்குதையா –ஆரை
ஊர் முழுக்க கண்ணீரால் மூழ்குதையா...
பார்முழுக்க உன் நாமம் ஒலிக்குதையா – ஆரை
ஊர் முழுக்க கண்ணீரால் கலிக்குதையா.
எல்லா நிகழ்விலும் நீயே முதல் வரி
இலக்கியம் என்றால் உனக்குத் தனி வெறி
அன்பும் அமைதியும் உந்தன் இரு விழி
பண்பும் பணிவும் அறிவோம் உன் வழி – நாம்
பண்பும் பணிவும் அறிவோம் உன் வழி
ஓரிறைக் கொள்கையை நெறியாய் கண்டாய்
ஈரடிக் குறள் தன்பால் ஈர்ப்புக் கொண்டாய்
முத்தமிழ் நீயும் முழுதாய் உண்டாய்
நாற்றிசை போற்றிட வாழ்வும் கண்டாய்
ஐபுலன் தமிழுக்காய் எழுதி வைத்தாய் - இப்போ
ஆறடி மண்ணிலே அமைதி கொண்டாய்..
ஏழேழு ஜென்மமும் உனை மறவோம் - இனி
எட்டுத் திக்கிலும் உனைப் பறைவோம்
ஒன்பது வாயில்கள் மூடினாலும்
உன்புகழ் வானையும் மேவுதையா
0 comments:
கருத்துரையிடுக