வேலழகன்

வேலழகன் பேச்சினிலே பால் ஒழுகும் - அவர்
மூச்சினிலும் கவி வீச்சினிலும் திருக் குறள் மணக்கும்
ஆலமரம்  போலவரின் பெயர் பரக்கும் - அவரை
மேவயினி மேதினியில் யார் பிறப்பர்?

வள்ளுவரின் வாய்மொழியில் வாழுபவர் -தமிழ்
பள்ளு முதல் பா வரையும் கூறுபவர்
துள்ளுமவர் நாவினிலே நாணயங்கள் - இளைஞர்
கொள்கை பெறச் சிந்தனைகள் ஊட்டுபவர்

உருமால் இல்லா பாரதி இவரோ சாரதி – நீ
ஒருகால் இவருடன் பழகிப் பார் அவர் சார் அதி
திருப்பழுகாமம் காட்டிய கண்ணியப் பாவலர் - வேல்
முருகென்ற தீட்டிய (இ)ரத்தினத் தாரகை

புகழ் விரும்பா புண்ணியனே பொன்மகனே- நா
மகள் வந்து விளையாடும் நாவரசே
பகல் வந்து களவாடும் அகலைப் போலே- உன்
இகழ் வெந்து வெருண்டோட வாழ்த்துகின்றேன்

தீயிற்கும் தென்றலுக்கும் பாலமிட்டாய் - உன்
நாவலுக்கும் நாமத்திற்கும் நாமடிமை
கோயிலுக்குப் பேகாத கோமகனே – உன்
பாவனைத்தும் பார் புகழ வாழ்த்துகின்றேன்

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments