பங்குனி - 8

பெண்களை என்றும் போற்றிடுவோம் - அவள்
கண்ணியம் தன்னைக் காத்திடுவோம்
அடுப்படி ஆகமம் மாற்றிடுவோம் - அவள்
படிப்பிலே அக்கறை காட்டிடுவோம்.

பங்குனி எட்டிலே நாளெடுப்போம் - அவள்
தங்கு தடை தகர்த் தோட்டிடுவோம்
மங்குமவள் மதி மாற்றிடுவோம் -பாரில்
எங்குமவள் புகழ் நாட்டிடுவோம்.

விண்வெளி வாகனம் ஓட்டிடுவாள் - அவள்
மண்ணின் பெருமையும் கூட்டிடுவாள்
வீட்டின் புகழ் எழ வாழ்ந்திடுவாள் - அவள்
நாட்டின் நலனுக்கும் மாந்திடுவாள


0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments