கவிநயம்

மாருதம் தந்த நல் இலக்கியமே
போருடன் வாழ்வையும் இயம்பிடுமே
காதலும் கற்பையும் காட்டிடுமே
சாதலில் காப்பியம் நாட்டிடுதே!

எண்ணுவதெல்லாம் எழுத்துருவில்
பண்ணுடன் பண்ணுவோம் பாவடிவில்
மண்ணுடன் வாசனை சேர்திடவே
நன்னயம் போசனை ஆக்கிடுவோம்

சேற்றில் முளைத்தசெந் தாமரைபோல்
காற்றினில் கற்பனை ஏற்றிடுவோம்
நூற்றில் ஒரு கவி என்றிடவே – கனிச்
சாற்றின் சுவையுற வார்த்திடுவோம்

நாட்டின் நடப்புகள் காட்டிடவே
ஏட்டில் எழுத்துரு வாக்கிடுவோம்
பாட்டில் பகுப்பறிவாளன் தனை
வீட்டில் இருந்து விடையாக்கிடுவோம்

மானுடம் கூறி மகிழ்ந்திடுவோம்
தானும் அதுவென வாழ்ந்திடுவோம்
மங்கல வார்த்தையில் மொழிந்திடுவோம்
இங்கிதமாய் அறிவூட்டிடுவோம்.

posted under |

0 comments:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments